இந்தியா

ராஜஸ்தானின் அடுத்த பட்ஜெட் இளைஞர்களுக்கானது: அசோக் கெலாட்

19th Aug 2022 08:32 PM

ADVERTISEMENT

ராஜஸ்தானின் அடுத்த பட்ஜெட் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கானதாக இருக்கும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

 ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு அடுத்த ஆண்டு அதன் கடைசி பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளது. 

பிர்லா அரங்கில் இன்று நடைபெற்ற டிஜிஃபெஸ்ட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அசோக் கெலாட் அடுத்த பட்ஜெட் குறித்த ஆலோனைகள் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து வரவேற்கப்படுவதாக தெரிவித்தார். அவர்களது ஆலோசனைகள் அடுத்த பட்ஜெட்டில் இடம் பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க: உ.பி.யில் அம்பேத்கர் சிலை சேதம்

ADVERTISEMENT

அந்த நிகழ்ச்சியில் அசோக் கெலாட் மேலும் பேசியதாவது: “  இந்த ஆண்டு பட்ஜெட்டில் 3 சதவிகிதம் நிதியானது தகவல் தொழில்நுட்பத் துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. அனைத்து சிறப்பு வாய்ந்த கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களும் இங்கு உள்ளன. இந்தியாவிலேயே ராஜஸ்தானில் மட்டுமே மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 30 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி சிறப்பாக கற்பிக்கப்பட்டு வருகிறது. அதில் நல்ல முன்னேற்றமும் தெரிகிறது. 1.35 கோடி பெண்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் இலவச இணைய சேவையுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் கொடுக்கப்படும். சிரஞ்சீவி காப்பீட்டு திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்கப்படும்.” என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT