இந்தியா

பயணிகளின் தரவுகளை தனியாருக்கு விற்கும் இந்தியன் ரயில்வே?

19th Aug 2022 06:48 PM

ADVERTISEMENT

வணிக நோக்கங்களுக்காக ரயில் பயணிகளின் தகவல்களை இந்தியன் ரயில்வே தனியாருக்கு விற்பனை செய்ய உள்ளது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் ரயில்வே நிறுவனத்திற்கு சொந்தமான ஐஆர்சிடிசி இணையதளத்தில் பயணிகள் ரயில் முன்பதிவை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பயணிகளின் பெயர், வயது, முகவரி, அலைபேசி எண்கள் உள்ளிட்ட பல தகவல்களை இந்தியன் ரயில்வே பெற்று முன்பதிவை மேற்கொள்கிறது. 

இதையும் படிக்க | வெளியானது பொன்னியின் செல்வனின் ‘சோழா..சோழா’ பாடல்

இந்நிலையில் பயணிகளின் தரவுகளை விற்பனை செய்வதற்கு தனியார் நிறுவனங்களிடம் இந்தியன் ரயில்வே டெண்டர் கோரியுள்ளது. வருவாயை அதிகரிக்கும் முயற்சியாக பயணிகளின் தரவுகளை தனியார் நிறுவனங்களிடம் விற்பனை செய்யும் இந்த நடவடிக்கை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

ADVERTISEMENT

சுற்றுலா, தங்குமிடம், நிதி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, காப்பீட்டுத்துறை, சுகாதாரம், உற்பத்தி, விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து, ஆற்றல் உருவாக்கம் உள்ளிட்ட துறைகளில் பயணிகளின் இந்தத் தரவுகள் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரூ.1000 கோடி வரை வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | செப்.7-ல் தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி

மக்களின் தரவுகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசு வருவாய் ஆதாரத்திற்காக தனியார் நிறுவனங்களிடம் விற்பனையில் ஈடுபடுவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT