இந்தியா

சிறைகள்தோறும் வகுப்பறைகள்: மாநில அரசின் புது முயற்சி

19th Aug 2022 04:27 PM

ADVERTISEMENT


சண்டிகர்: சிறைக் கைதிகள் கல்வி பயிலும் சூழலை எளிதாக்கும் வகையில் சிறைகள்தோறும் வகுப்பறைகளைக் கட்ட பஞ்சாப் மாநில சிறைத்துறை திட்டமிட்டுள்ளது.

சிறைக் கைதிகளின் வாழ்க்கையை மீட்டெடுக்கவும், புதுவாழ்வு பிறக்கவும், ஒவ்வொரு சிறையிலும் 50 பேர் அமர்ந்து கல்வி பயிலக் கூடிய வகுப்பறைகளைக் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறையில் இருப்பவர்களுக்கு கல்வியும், நன்னடத்தையும் கிடைக்கும் வகையில் அரசு இந்த நல்ல முடிவை எடுத்திருப்பதாக சிறைத் துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் கூறியுள்ளார்.

ஒவ்வொரு சிறையிலும் தலா 50 மாணவர்கள் அமர்ந்து பயிலக் கூடிய இரண்டு முதல் 3 வகுப்பறைகள் கட்டப்படும். எதிர்காலத்தில் அதிக வகுப்பறைகள் தேவைப்பட்டால் அதற்கான வசதியும் செய்து கொடுக்கப்படும். நூலகமும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றார்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT