இந்தியா

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் சென்ற ஹெலிகாப்டர் அவரசமாக தரையிறக்கம்

19th Aug 2022 03:36 PM

ADVERTISEMENT

 

பிகார் முதல்வர் பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பிகாரில் 7-வது முறை முதல்வராக பதவியேற்றுக்கொண்ட நிதீஷ் குமார் அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலவரம் குறித்து அறிவதற்காக இன்று ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில், திடீரென உருவான மோசமான வானிலை காரணமாக அவசரமாக ஹெலிகாப்டர் கயா மாவட்டதில் தரையிறக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனால், அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும், வானிலை சீரான பின் ஹெலிகாப்டர் மீண்டும் இயக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT