இந்தியா

சீனத்தில் மீண்டும் கல்வியைத் தொடர விரும்பும் இந்திய மாணவர்கள் கவனத்துக்கு..

19th Aug 2022 04:42 PM

ADVERTISEMENT


புது தில்லி: சீனத்தில் மீண்டும் படிப்பைத் தொடர விரும்பும் இந்திய மாணவர்கள் சீன தூதரக அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா பேரிடர், விசாகெடுபிடிகள் போன்றவற்றால், சீனத்தில் பாதியில் படிப்பை விட்டுவிட்டு இந்தியா திரும்பிய மாணவர்கள் மீண்டும் சீனா சென்று படிப்பைத் தொடர்வதற்கான விவரங்கள் மற்றும் தகவல்களை சீன தூதரகம் வெளியிடவிருப்பதாக இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க | அம்பானி வீடு இல்லை.. ஆர்டிஓ வீடு; மலைத்துப் போன அதிகாரிகள் (விடியோ)

இந்திய மாணவர்களின் முதல் பிரிவினர் வெகு விரைவில் சீனத்துக்குச் சென்று கல்வியைத்தொடர்வார்கள் என்றும், அதற்கான பணிகளை இரு நாடுகளும் மேற்கொண்டிருப்பதாகவும் கூறினார்.

ADVERTISEMENT

இது குறித்து இந்தியாவில் உள்ள சீன தூதரக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இத்தனை நாள்கள், அமைதியாகக் காத்திருந்தமைக்கு இந்திய மாணவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT