இந்தியா

உ.பி.யில் அம்பேத்கர் சிலை சேதம்

19th Aug 2022 07:56 PM

ADVERTISEMENT

உ.பி.யில் அம்பேத்கரின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம், ரிகிபூர்வா கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை நள்ளிரவு மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இன்று காலை அப்பகுதி மக்கள் சிலை சேதமடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சிலையை மாற்றி தருவதாக உறுதியளித்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். 

இதையும் படிக்க- சென்னையில் தொடங்கும் ஜெயிலர் படப்பிடிப்பு?

ADVERTISEMENT

இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜீவ் தீட்சித் கூறுகையில், "சந்தேகத்திற்குரிய நபர்கள் இருட்டில் சிலையை சேதப்படுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். தப்பியோடிய மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகள் விரைவில் கைது செய்துவிடுவோம் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT