இந்தியா

உத்தரகண்ட்: மருத்துவமனைக்கு வெளியே பெண்ணுக்குப் பிரசவம், செவிலியர் பணி நீக்கம்

18th Aug 2022 08:07 PM

ADVERTISEMENT

உத்தரகண்ட் மாநிலத்தில் பெண் ஒருவர் மருத்துவமனைக்கு வெளியே பிரசவம் பார்க்க நேர்ந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ட்விட்டரில், மருத்துவமனைக்கு வெளியே அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்படும் விடியோவை பகிர்ந்துள்ளார். 

இதையும் படிக்க: ‘பாஜகவின் அடாவடி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’: கே.பாலகிருஷ்ணன்


அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “ பாஜக ஆட்சியில் மருத்துவமனைக்கு வெளியே திறந்த வெளியில் பிரசவம் பார்க்கும் நிலைக்கு பெண் ஒருவர் தள்ளப்பட்டுள்ளார். நாம் எப்படி அம்ரித் மகோத்சவ் கொண்டாட முடியும்.” எனப் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து பிலிபிட் மாவட்டத்தின் முதன்மை மருத்துவ அலுவலர் அலோக் ஷர்மா கூறியதாவது: “ இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பணியில் இருந்த செவிலியர் ரூபி சரிவர கடமையை செய்யத் தவறியதால் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.மேலும், அந்த மருத்துவமனையின் மருத்துவர் மீதும் துறை சார்ந்த நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.” என்றார்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT