இந்தியா

பள்ளி முதல்வர் திட்டியதால் ரயில் முன் பாய்ந்து மாணவன் தற்கொலை

18th Aug 2022 05:49 PM

ADVERTISEMENT

 

ஹரியாணா மாநிலம் அதம்பூரில் உள்ள பள்ளி மாணவனை முதல்வர் திட்டி, தாக்கியதால் ரயில் முன் பாய்ந்து மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதம்பூரில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை பள்ளி முதல்வர் படிக்கத் தகுதியற்றவன் எனக் கூறி திட்டி தாக்கியுள்ளார். 

இந்நிலையில், கோபமடைந்த பள்ளி மாணவன் ஹிசார் மாவட்டத்தில் பயணிகள் ரயிலின் முன் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளான். 

ADVERTISEMENT

படிக்க: நாட்டின் முதல் இரட்டை அடுக்கு ஏசிப் பேருந்து மும்பையில் இயக்கம்

இதற்கிடையில், பள்ளி மாணவர்கள் மற்றும் இறந்த மாணவனின் தங்கை  ஆகியோர் கடந்த சில நாள்களாக முதல்வர் திட்டி, தாக்கி வருவதாக மாணவனின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, பெற்றோர் அளித்த புகாரையடுத்து, தனியார்ப் பள்ளி முதல்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT