இந்தியா

‘பாலியல் வன்கொடுமையாளர்கள் விடுதலையை திரும்பப் பெறுக’: உச்சநீதிமன்றத்துக்கு சமூக ஆர்வலர்கள் கூட்டறிக்கை

18th Aug 2022 10:56 PM

ADVERTISEMENT

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் போது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 11 பேரின் விடுதலையை திரும்பப் பெற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின்போது பில்கிஸ் பானு எனும் 5 மாத கர்ப்பிணி பெண் மற்றும் அவரது குடும்பத்தாரை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய வழக்கில் 11 பேர் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. தண்டனை பெற்று 14 ஆண்டுகள் ஆன நிலையில் சிறை நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தன்று அவர்களை விடுதலை செய்து குஜராத் அரசு அறிவிப்பு செய்தது. மேலும் விடுதலையான 11 பேருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தது நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகளை சந்தித்தது.

பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்திருப்பதன் மூலம் பாஜக அரசு பாலியல் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் தெரிவித்துள்ளன.

இதையும் படிக்க | உலகின் மோசமான காற்று மாசுபாடு கொண்ட நகரங்களின் பட்டியலில் தில்லி, கொல்கத்தா

ADVERTISEMENT

இந்நிலையில் குற்றவாளிகள் 11 பேரின் விடுதலையை திரும்பப் பெற வேண்டும் என பெண்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதுதொடர்பாக மனித உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், குற்றம் நிரூபணம் செய்யப்பட்ட 11 பேரின் விடுதலை நீதியின் மீதான மக்களின் நம்பிக்கையை குலைக்கும் விதமாக இருப்பதாகவும், உடனடியாக அவர்களின் விடுதலையை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த அறிக்கையை சமூக ஆர்வலர்கள் சையதா ஹமீத், ஜஃபருல்-இஸ்லாம் கான், ரூப் ரேகா, தேவகி ஜெயின், உமா சக்ரவர்த்தி, சுபாஷினி அலி, கவிதா கிருஷ்ணன், மைமூனா மொல்லா, ஹசினா கான், ரச்சனா முத்ரபோயின, ஷப்னம் ஹஷ்மி உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்டுள்ளனர். 

இவர்களைத் தவிர நாடு முழுவதும் உள்ள மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்புகள் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளன.

இத்தகைய விடுதலைகள் பாலியல் மற்றும் கொலை குற்றங்களுக்கு ஊக்கம் தருவதாக அமைவதுடன் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அதிகரிக்கச் செய்துவிடும் எனவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT