இந்தியா

மே.வங்க பணி நியமன மோசடி: பாா்த்தா, அா்பிதாவுக்கு காவல் நீட்டிப்பு

18th Aug 2022 04:54 PM

ADVERTISEMENT

 

மேற்கு வங்கத்தில் அரசு பள்ளி ஆசிரியா்கள் பணி நியமன முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜி, அவரது உதவியாளா் அா்பிதா முகா்ஜி ஆகியோருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியா்கள் பணி நியமன முறைகேடு வழக்கில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி கைதான மேற்கு வங்க  முன்னாள் அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜி, அவரது உதவியாளா் அா்பிதா முகா்ஜி ஆகிய இருவரும் அமலாக்கத் துறை காவலிலிருந்து வந்தனா்.

காவல் முடிந்த நிலையில், கொல்கத்தாவில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆக.6 ஆம் ஆஜா்படுத்தப்பட்டனா்.

ADVERTISEMENT

அப்போது, பாா்த்தா சட்டா்ஜிக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்ட நீதிபதி ஜீவன்குமாா் சாது, இருவரையும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா். அதன்படி, ஆகஸ்ட் 18 ஆம் தேதியுடன் காவல் முடிவதைத் தொடர்ந்து அமலாக்கத் துறை இன்று அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. 

வழக்கை விசாரித்த நீதிபதி அமலாக்கத் துறையின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 14 நாள்களுக்கு காவலை நீட்டித்துள்ளார்.

மேற்கு வங்க அரசுப் பள்ளிகளில் ஆசிரியா்கள், இதர ஊழியா்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்ாக புகாா் எழுந்தது. இதுதொடா்பான வழக்கில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் பாா்த்தா சட்டா்ஜி, அா்பிதா முகா்ஜி மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. அா்பிதாவுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.49.80 கோடி ரொக்கப் பணம், நகைகள், தங்கக் கட்டிகள், நிலம், கட்டடங்கள், பண்ணைவீடு சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT