இந்தியா

தில்லியின் பள்ளி மாடலை பின்பற்ற விரும்பும் பிகார் அமைச்சர்: கேஜரிவால் வரவேற்பு

PTI

தில்லியின் பள்ளி மாதிரியைப் பின்பற்ற விரும்பும் பிகாரின் கல்வி அமைச்சர் சந்திரசேகருக்கு வரவேற்பு அளித்துள்ளார் முதல்வர் கேஜரிவால். 

பிகார் மாநிலத்தில் பள்ளிக் கல்வி முறையை முழுவதுமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள, கல்வி அமைச்சர் சந்திரசேகர், தில்லி மற்றும் பிற மாநிலங்களுக்கு கல்வி மாதிரிகளை ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்பும் என்று புதன்கிழமை தெரிவித்தார். 

தேசிய தலைநகரில் அரவிந்த் கேஜரிவால் அரசின் கல்வி மாதிரியை மக்கள் பாராட்டுகிறார்கள். 

பிகார் கல்வி அமைச்சர் தனது குழுவை தில்லி பள்ளி மாதிரியை ஆய்வு செய்ய ஆர்வம் காட்டுவது குறித்த செய்திக்கு கேஜரிவால் பதிலளித்துள்ளார். 

தேசிய தலைநகருக்கு பிகார் கல்வி அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் வருகை தரும்போது தில்லி அரசு தனது பள்ளி மாதிரியை மகிழ்ச்சியாகக் காண்பிக்கும். 

சந்திரசேகர் ஜி மற்றும் அவரது குழுவினர் தில்லி அரசுப் பள்ளிகளுக்கு வரவேற்கப்படுகிறார்கள் என்று இந்தியில் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

அரசாங்கங்கள் இப்படி ஒருவருக்கொருவர் கற்றுக்கொண்டால் நாடு முன்னேறும். 

இந்தியாவை உலகின் முதல் நாடாக மாற்ற, நாட்டின் அனைத்து குழந்தைகளுக்கும் சிறந்த கல்வியை நாம் ஒன்றாக வழங்க வேண்டும் என்று அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT