இந்தியா

நாட்டில் ஒரே நாளில் 12.608 பேருக்கு தொற்று: 72  பேர் பலி

18th Aug 2022 10:08 AM

ADVERTISEMENT

 

நாட்டில் புதன்கிழமை கரோனா பாதிப்பு 9,062 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் புதிதாக 12,608 ஆக உள்ளது. 72 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 9,062 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேலும் புதிதாக 12,608 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,42,98,864-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,01,343 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.23 சதவீதமாக உள்ளது. 

இதையும் படிக்க | ஏடிஎம் கூடுதல் பரிவர்த்தனைக்கான கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

தொற்று பாதித்தவர்களில் புதிதாக 72 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,27,206 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.

கரோனாவில் இருந்து 16,251 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,36,70,315-ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.58 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | அதிமுக தலைமை அலுவலக விவகாரம்: ஓபிஎஸ் மனு இன்று விசாரணை

நாடு முழுவதும் இதுவரை 2,08,95,79,722 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. புதன்கிழமை மட்டும் 38,64,471 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT