இந்தியா

நாட்டின் முதல் இரட்டை அடுக்கு ஏசிப் பேருந்து மும்பையில் இயக்கம்

18th Aug 2022 05:27 PM

ADVERTISEMENT


நாட்டின் முதல் இரட்டை அடுக்கு ஏசி வசதி கொண்ட மின்சாரத்தில் இயங்கும் பேருந்துப் போக்குவரத்தை, மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று துவக்கி வைத்தார்.

இஐவி22 என்ற மின்சாரத்தில் இயங்கும் இந்த இரட்டை அடுக்குப் பேருந்து, 250 கி.மீ. தொலைவு வரை இயக்கப்படும் திறன் கொண்டது.

இதையும் படிக்க | அம்பானி வீடு இல்லை.. ஆர்டிஓ வீடு; மலைத்துப் போன அதிகாரிகள் (விடியோ)

இந்துஜா குழுமத்தின் அஷோக் லைலேண்ட் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தில் இயங்கம் இந்த இரட்டை அடுக்குப் பேருந்தில் அதிகபட்சமாக 65 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தானியங்கி கதவுகள் மற்றும் சிசிடிவி கேமரா வசதித கொண்டது.

ADVERTISEMENT

முதற்கட்டமாக 200 மின்சாரத்தில் இயங்கும் இரட்டை அடுக்குப் பேருந்துகளை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டுக்குள் 50 பேருந்துகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : Ashok Leyland
ADVERTISEMENT
ADVERTISEMENT