இந்தியா

ஏடிஎம் கூடுதல் பரிவர்த்தனைக்கான கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

18th Aug 2022 08:47 AM

ADVERTISEMENT

 

வங்கிக் கணக்கு வைத்திருப்போர் தங்கள் கணக்கு வைத்திருக்கும் ஏடிஎம் அட்டை மூலம் ஏடிஎம் மையங்களில் மாதத்திற்கு 5 முறைக்கு மேல் நடைபெறும் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைகளுக்கு தற்போது வசூலிக்கப்பட்டு வந்த ரூ.20 கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1 அதிகரித்து ரூ.21 ஆக வசூலிக்கும் புதிய கட்டண முறை வியாழக்கிழமை (ஆக.18) முதல் அமலுக்கு வந்தது. 

வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஏடிஎம் மையங்களில் மாதத்திற்கு 5 முறையும், பிற ஏடிஎம் மையத்தில் 3 முறையும் இலவசமாக பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட பரிமாற்றங்கள் அதாவது நிதி மற்றும் நிதி சாரா பரிமாற்றங்கள் இலவசமாக செய்ய முடியும். 

இதையும் படிக்கலாம் | பாஜக ஆட்சிமன்றக் குழுவிலிருந்து கட்கரி, சௌஹான் விடுவிப்பு

ADVERTISEMENT

அதற்கு மேல் நடைபெறும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், அனுமதிக்கப்பட்ட இலவச பரிவர்த்தனைக்கு மேல் நடைபெறும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தற்போது வசூலிக்கப்பட்டு வந்த  சேவைக் கட்டணம் ரூ.20 இல் இருந்து கூடுதலாக ரூ.1 அதிகரித்து ரூ.21 ஆக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டண உயர்வு வியாழக்கிழமை (ஆக.18) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT