இந்தியா

பட்டப்பகலில் இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்(விடியோ)

18th Aug 2022 10:36 AM

ADVERTISEMENT

பிகாரில் பட்டப்பகலில் இளம்பெண்ணை துப்பாக்கியால் இளைஞர் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னா அருகேவுள்ள சிபாரா என்ற நெரிசல் மிகுந்த பகுதியில் நடந்து சென்ற இளம்பெண்ணை, அப்பகுதியில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில், கழுத்தில் பலத்த காயமடைந்த இளம்பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

காய்கறி வியாபாரியின் மகளான இளம்பெண், சுடப்பட்டதற்கான காரணம் காதல் விவகாரமாக இருக்கலாம் என பாட்னா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

நெரிசல் மிகுந்த பகுதியில் இளம்பெண் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தப்பியோடிய இளைஞரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | ஏடிஎம் கூடுதல் பரிவர்த்தனைக்கான கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இச்சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT