இந்தியா

ஜூலை மாதத்தில் குறைந்த விமானப் பயணிகளின் எண்ணிக்கை!

18th Aug 2022 06:14 PM

ADVERTISEMENT

ஜூலை மாதத்தில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 7.6 சதவிகிதம் குறைந்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநகரம் தகவல் தெரிவித்துள்ளது. 

நாட்டில் கடந்த ஜூன் மாதத்தில் 1.05 கோடி பேர் விமானப் பயணம் மேற்கொண்ட நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் இது 90.7 லட்சமாகக் குறைந்துள்ளது. இது கடந்த மாதத்தைவிட 7.6 சதவிகிதம் குறைவாகும் என்று மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநகரம் வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இதன் இயக்குனர் ஜெனரல் அருண் குமார் கூறுகையில், 'செப்டம்பர் 1 முதல் கட்டண உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளதன் மூலம் நான்காவது காலாண்டில் கரோனாவுக்கு முந்தைய நிலையை விரைவில் எட்டுவோம், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்புகிறோம்' என்றார். 

இதையும் படிக்க | இப்படிப்பட்ட அரசியல் செய்ய வெட்கப்பட வேண்டாமா? - பிரதமருக்கு ராகுல் கேள்வி

ADVERTISEMENT

மேலும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

மே மாதத்தில் 1.2 கோடியாகவும் ஏப்ரலில் 1.1 கோடியாகவும் மார்ச் மாதத்தில் 1.06 கோடியாகவும் பயணிகளின் எண்ணிக்கை இருந்துள்ளதாக ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. 

மேலும், உள்நாட்டு விமான நிறுவனங்கள் மூலமாக ஜனவரி முதல் ஜூலை வரை 6.7 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். 2021 ஆம் ஆண்டின் இதே காலத்தில் இது 3.93 கோடியாக இருந்தது. எனவே, இந்த காலகட்ட வளர்ச்சி 70.18% ஆக உள்ளது.

ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா மற்றும் அலையன்ஸ் ஏர் போன்ற முக்கிய விமான நிறுவனங்கள், ஜூலை மாதத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும்  ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஏர் ஏசியாவில் குறைந்துள்ளது. 

ஜூலை மாதத்தில் ரத்து செய்யப்பட்ட 58.4% விமானங்களில் 23.2% தொழில்நுட்ப காரணங்களால் ரத்து செய்யப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT