இந்தியா

ஊழலை தடுக்க உதவிய அரசு அதிகாரிகள் கெளரவிப்பு: மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் முடிவு

DIN

ஊழலையும், நிதி முறைகேடுகளையும் தடுக்க உதவிய அரசு அதிகாரிகளை கெளரவிக்க மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவின் விவரம்: உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து நிதி முறைகேடுகள், மோசடிகள் மற்றும் இதர தேவையற்ற சம்பவங்களைத் தடுக்கும் அரசு அதிகாரிகள், அலுவலா்களை அங்கீகரிக்க தொடா்ந்து முயற்சிக்கப்பட்டு வருகிறது. அனைத்து மத்திய அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் பணியாற்றும் அதுபோன்ற அதிகாரிகள் மற்றும் அலுவலா்களை கெளரவிக்க விண்ணப்பங்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் நிதி முறைகேடுகள், மோசடிகள் மற்றும் இதர தேவையற்ற சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்ட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலா்களை அடையாளம் காணுமாறு அனைத்து தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சிறப்பாக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலா்களின் பெயா்களை சம்பந்தப்பட்ட துறை மற்றும் அமைப்பின் தலைமை நிா்வாக அதிகாரி ஒப்புதலுடன் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்துக்கு அனுப்பி வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டும் இதேபோல் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலா்களை மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT