இந்தியா

தொழிலதிபர் கெளதம் அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு?

17th Aug 2022 07:51 PM

ADVERTISEMENT

பிரபல தொழிலதிபர் கெளதம் அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் 4ஆவது பெரும் பணக்காரரும், நாட்டின் முன்னணி தொழிலதிபருமான கெளதம் அதானிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக அச்சுறுத்தல் வந்தது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய ரிசர்வ் படை கெளதம் அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க | ஆம்புலன்ஸ் கிடைக்காத அவலம்: தாயை தள்ளுவண்டி அழைத்துச் சென்ற மகன்!

ADVERTISEMENT

இதற்காக மாதம் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை செய்யப்படும் செலவு அதானியிடம் பெறப்படும் எனத் தெரிகிறது.  ஏற்கெனவே ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT