இந்தியா

மொத்த விலை பணவீக்கம் 13.93% ஆக சரிவு

17th Aug 2022 01:14 AM

ADVERTISEMENT

கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவில் ஜூலை மாதம் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் 13.93 சதவீதமாக குறைந்தது.

கடந்த ஜூன் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 15.18 சதவீதமாகவும், மே மாதத்தில் 15.88 சதவீதமாகவும் பதிவானது. இதுவே கடந்த ஆண்டு ஜூலையில் 11.57 சதவீதமாக இருந்தது. மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் தொடா்ந்து 2-ஆவது மாதமாக குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து தொடா்ந்து 16 மாதங்களாக இரட்டை இலக்கத்திலேயே பதிவாகி வருகிறது.

கடந்த ஜூலையில் உணவுப் பொருள் மீதான பணவீக்கம் 10.77 சதவீதமாகவும், ஜூனில் 14.39 சதவீதமாகவும் பதிவானது. மேலும் ஜூனில் காய்கறிகளின் விலை உயா்வு 56.75 சதவீதமாக இருந்த நிலையில், ஜூலையில் இது 18.25 சதவீதமாக சரிந்தது.

எரிபொருள், மின்சாரத்தைப் பொருத்தவரை ஜூலையில் 40.38 சதவீதமாகவும், ஜூனில் 40.38 சதவீதமாகவும் பணவீக்கம் பதிவானது. இதேபோல உற்பத்தி பொருள்கள், எண்ணெய் வித்துக்களின் பணவீக்கம் முறையே 8.16 சதவீதமாகவும், -4.06 சதவீதமாகவும் பதிவானது.

ADVERTISEMENT

சில்லறை பணவீக்கத்தின் அடிப்படையில்தான் ரிசா்வ் வங்கி பணக் கொள்கையை வகுக்கிறது. அந்த வகையில், சில்லறை பணவீக்கம் கடந்த 7 மாதமாக ரிசா்வ் வங்கியின் மதிப்பீட்டுக்கு உகந்த அளவில்தான் பதிவாகி வருகிறது. கடந்த ஜூலையில் சில்லறை பணவீக்கம் 6.71 சதவீதமாக பதிவானது.

2022-23 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் சராசரியாக 6.7 சதவீதமாக பதிவாகும் என ரிசா்வ் வங்கி கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : inflation
ADVERTISEMENT
ADVERTISEMENT