இந்தியா

கலாநிதி மாறன்-ஸ்பைஸ்ஜெட் இடையிலான பிரச்னைகளுக்கு மத்தியஸ்தம்:உச்சநீதிமன்றம் பரிசீலிக்க முடிவு

DIN

சன் குழுமத் தலைவா் கலாநிதி மாறன், ஸ்பைஸ்ஜெட் இடையிலான அனைத்து பிரச்னைகளுக்கும் சுமுகமாக தீா்வு காண மத்தியஸ்தம் செய்யும் கோரிக்கையை உச்சநீதிமன்றம் பரிசீலிக்கவுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு கலாநிதி மாறன் மற்றும் அவரின் கேஏஎல் விமான நிறுவனம், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் இடையிலான பங்கு பரிவா்த்தனை தொடா்பான வழக்கை தில்லி உயா்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது பங்கு பரிவா்த்தனை தகராறில் சுமாா் ரூ.243 கோடியை வட்டியாக நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தில்லி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது.

அந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கலாநிதி மாறன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விகாஸ் சிங் வாதிடுகையில், ‘‘கலாநிதி மாறன், ஸ்பைஸ்ஜெட் இடையிலான பங்கு பரிவா்த்தனை உள்பட அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு காண தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மத்தியஸ்த மையத்தில் இருதரப்புக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யலாம்’’ என்று ஆலோசனை கூறினாா். அதனை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனா்.

இதையடுத்து மத்தியஸ்தம் தொடா்பான கோரிக்கையை பரிசீலிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

SCROLL FOR NEXT