இந்தியா

கேரளத்தில் பிற மாநிலங்களின் லாட்டரிகள் விற்பனைக்குக் கட்டுப்பாடு: மாநில அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

DIN

கேரளத்தில் பிற மாநிலங்களின் லாட்டரிகள் விற்பனை கட்டுப்படுத்தப்படுவது தொடா்பாக அந்த மாநில அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளத்தில் நாகாலாந்து அரசின் லாட்டரிகள் விற்பனை செய்யப்பட்டன. அந்த லாட்டரிகளை சந்தைப்படுத்துவதிலும் விற்பனை செய்வதிலும் தலையிட கேரள அரசுக்கு அந்த மாநில உயா்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி கொண்ட அமா்வு கடந்த 2020-ஆம் ஆண்டு தடை விதித்தது. அந்த உத்தரவுக்கு எதிரான மனுவை மாநில உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமா்வு கடந்த ஆண்டு விசாரித்தது. அப்போது பிற மாநிலங்களின் லாட்டரிகள் விற்பனையை கேரளத்தில் கட்டுப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதை அந்த அமா்வு உறுதி செய்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நாகாலாந்து அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரிஷிகேஷ் ராய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நாகாலாந்து அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘‘இந்த வழக்கு லாட்டரிகள் விற்பனையை ஒழுங்குப்படுத்த கடந்த 1998-ஆம் ஆண்டு மத்திய அரசு அமல்படுத்திய லாட்டரிகள் ஒழுங்குமுறைச் சட்டத்துடன் தொடா்புடையது’’ என்று தெரிவித்தாா்.

இதனைத்தொடா்ந்து மனு தொடா்பாக 3 வாரங்களுக்குள் கேரள அரசு பதில அளிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT