இந்தியா

‘உண்மையான முதல்வர் யார் என்பது மக்களுக்கு தெரியும்’: ஆதித்ய தாக்கரே

17th Aug 2022 07:33 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநிலத்தின் உண்மையான முதல்வர் யார் என்பது அனைவருக்கும் தெரியும் என சிவசேனை கட்சியின் ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு வெளியேறிய நிலையில் அம்மாநிலத்தில் அரசியல் பரபரப்பு கூடியுள்ளது. பாஜக கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்புள்ள நிலையில் அமைச்சரவையில் பாஜகவும் இடம்பிடித்துள்ளது. 

இதையும் படிக்க | ’ஷியாம் சிங்கா ராய்’ ஆஸ்கருக்கு பரிந்துரை!

இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய சிவசேனை கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே, “மகாராஷ்டிரத்தின் உண்மையான முதல்வர் யார் என்பது அனைவருக்கும் தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள மகாராஷ்டிர அமைச்சரவை மக்களின் குரலையோ, சுயேட்சை  உறுப்பினர்களின் குரலையோ, பெண்களின் குரலையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என ஆதித்ய தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | ‘இங்க பதில் சொல்ல முடியாது’:  வெளிநாட்டுவாழ் தமிழரின் கேள்வியைத் தவிர்த்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

சிவசேனைக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒருங்கிணைந்த முதல் 15 சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவரைக் கூட அமைச்சரவையில் இடம்பெறச் செய்யாதது குறித்து கேள்வி எழுப்பிய ஆதித்ய தாக்கரே உண்மையான விசுவாசம் என்பது அங்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT