இந்தியா

குழந்தைகளுக்கான ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் மாற்றமா?

17th Aug 2022 06:06 PM

ADVERTISEMENT

புது தில்லி: குழந்தைகளுக்கான ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் மாற்றம் குறித்து வெளியான தகவலுக்கு ரயில்வே அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

ஒன்று முதல் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தற்போது பெரியவர்களின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதையடுத்து ரயிலில் பயணிக்கும் குழந்தைகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது தொடர்பான விதியில் எந்த மாற்றமும் இல்லை என்று ரயில்வே அமைச்சகம் இன்று(புதன் கிழமை) தெளிவுபடுத்தியுள்ளது.

ரயில்வே அமைச்சகத்தின் மார்ச் 6, 2020 ஆம் ஆண்டு தேதியிட்ட சுற்றறிக்கையில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று கூறுப்பட்டுள்ளது.

அதன்படி, 5 வயதுக்குட்பட்ட தங்கள் குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம். ஆனால் அவர்களுக்கு தனி படுக்கையோ அல்லது இருக்கையோ வழங்கப்பட மாட்டாது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ரயிலில் பயணிக்கும் குழந்தைகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வது தொடர்பான விதியை ரயில்வே மாற்றியுள்ளதாக சமீபத்திய சில ஊடகச் செய்திகள் வெளியாகியது.

இதையும் படிக்க: கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள்

இந்நிலையில் ரயிலில் பயணிக்கும் குழந்தைகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT