இந்தியா

தில்லி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை இரண்டு மடங்கானது

DIN

புது தில்லியில் நேற்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பாலானோர் இணை நோயுள்ளவர்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பாதிப்பு மற்றும் . மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அபாய அளவில் இல்லாவிட்டாலும், மக்கள் கரோனா முன்னெச்சரிக்கையை கையாள்வதில் இருக்கும் அலட்சியமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி 307 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இது மொத்த மருத்துவமனை படுக்கை வசதியில் 1 சதவீதமாகும். ஆனால், இந்த விகிதம் ஆகஸ்ட் 15ஆம் தேதி 6.31 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 917 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 3 போ் உயிரிழந்துள்ளனா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 19.20 சதவீதமாக பதிவானது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரில் திங்கள்கிழமை மொத்தம் 4,775 கரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டன. திங்கள்கிழமை 1,227 பேருக்கு பாதிப்பும், 8 இறப்புகளும், 14.57 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின. புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,86,739-ஆக அதிகரித்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,392-ஆக உயா்ந்தது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதத்தில் இல்லாத வகையில் கடந்த வாரத்தில் மட்டும் தில்லியில் 51 பேர் கரோனாவுக்கு பலியாகியிருந்தனர்.

தில்லியில் கடந்த 6 மாதங்களில் இல்லாத வகையில் தற்போது கரோனா பலி அதிகரித்துள்ளது. ஒரு பக்கம் நாட்டில் கரோனா பாதிப்பு மூன்றாவது வாரமாகக் குறைந்து வரும் நிலையில் தில்லியில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாட்டில் ஆகஸ்ட் 8 - 14ஆம் தேதி வரையிலான வாரத்தில் 307 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். ஞாயிறன்று சில மாநிலங்களில் பலி எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. அதனோடு சேர்த்தால் மொத்த பலி எண்ணிக்கை 310 ஐ எட்டும். அவ்வாறு இருந்தால் மார்ச் மாதம் முதல் வாரத்துக்குப் பிறகு பதிவாகும் அதிக உயர்பலியாகும்.

மார்ச் முதல் வாரத்தில் 626 பேர் பலியாகினர். கடந்த வாரம் கரோனாவுக்கு 295 பேர் பலியாகினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

SCROLL FOR NEXT