இந்தியா

இலவசத் திட்டங்கள்: அரசியல் கட்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது -உச்சநீதிமன்றம்

17th Aug 2022 10:05 PM

ADVERTISEMENT

 

இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தரக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது மக்களின் நிதிப் பணத்தை பாதிக்கச் செய்வதாகவும், இலவசங்கள் அறிவிக்கும் கட்சிகளை ஒழுங்குப்படுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாய் வழக்கு தொடுத்தார். 

படிக்கபட்டியலின ஆசிரியை உயிருடன் எரித்துக் கொலை: கொடுத்த கடனை கேட்டதற்கா?

ADVERTISEMENT

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது. அவைகளுக்குத் தடை விதிக்கவும் முடியாது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது. மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவது அரசாங்கத்தின் தலையாய கடமை. மக்கள் வரிப்பணத்தில் உருவாகும் பொது நிதியை எப்படி பயனுள்ளவற்றிற்கு பயன்படுத்துவது என்பதுதான் விவாதத்திற்குரிய பிரச்னை எனவும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT