இந்தியா

ஒண்டி வீரன் நினைவு தபால்தலை ஆகஸ்ட் 20-இல் வெளியீடு: மத்திய அரசு தகவல்

17th Aug 2022 12:00 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு தபால் தலை ஆகஸ்ட் 20 -ஆம் தேதி திருநெல்வேலியில் வெளியிடப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவீரன் பூலித்தேவனின் படைத் தளபதியாக விளங்கி, ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தவர் மாவீரன் ஒண்டி வீரன். தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த முதல் இந்திய சுதந்திரப் போரின் தளபதிகளில் ஒருவராக திகழ்ந்த மாவீரன் இவர். ஒரு கையை இழந்த பிறகும் நம்பிக்கையை இழக்காமல் கடைசி வரை களத்தில் நின்று ஆங்கிலேய படைகளை தனியாக சென்று அழித்தார் என்றும் அதனால் அவர் ஒண்டிவீரன் எனவும் அழைக்கப்பட்டார்.
ஒண்டி வீரனின் 251 -ஆவது நினைவு தினம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு அன்றைய தினம் அவரின் நினைவு தபால்தலை வெளியிடப்படும் என மத்திய தபால் துறை அறிவித்துள்ளது.
இதற்காக, மத்திய தொலைதொடர்பு தபால் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை மத்திய செய்தி, ஒலிபரப்பு, மீன்வளத் துறை இணையமைச்சர் எல்.முருகன் நேரில் சந்தித்து, நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து எல்.முருகன் தனது ட்விட்டர் பதிவில், "சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு தபால்தலையை வெளியிட ஒப்புதல் அளித்த, மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். தமிழகத்தில் திருநெல்வேலியில் ஒண்டி வீரனின் நினைவு தினமான ஆகஸ்ட் 20 -ஆம் தேதி அவரது நினைவு தபால்தலை வெளியிடப்பட உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT