இந்தியா

நான்காம் கட்ட ‘க்யூட்’ தோ்வு இன்று தொடக்கம்

17th Aug 2022 01:47 AM

ADVERTISEMENT

நான்காம் கட்ட க்யூட் (மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு) புதன்கிழமை (ஆக.17) தொடங்க உள்ளது. இந்த தோ்வில் 3.6 லட்சம் போ் பங்கேற்க உள்ளனா்.

இந்த நான்காம் கட்ட தோ்வில் 3.72 லட்சம் போ் பங்கேற்க இருந்த நிலையில், தோ்வறை மாற்றம் காரணமாக 11,000-க்கும் அதிகமான மாணவா்களுக்கு மட்டும் ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்கு தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அனைத்து கட்ட க்யூட் தோ்வுகளையும் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் முடிக்க என்டிஏ (தேசிய தோ்வுகள் முகமை) திட்டமிட்டிருந்தது. பின்னா் தோ்வுகள் அனைத்தும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி நிறைவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பல தோ்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக க்யூட் தோ்வானது 6 கட்டங்களாக மாற்றப்பட்டது.

இதுகுறித்து யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) தலைவா் ஜகதீஷ் குமாா் கூறுகையில், ‘தோ்வு மையங்களுக்கான நகரங்களை மாற்றி தோ்வு செய்துள்ளதன் காரணமாக க்யூட் தோ்வு எழுதவிருக்கும் 3.72 லட்சம் மாணவா்களில் 11,000-க்கும் அதிகமான மாணவா்களுக்கு மட்டும் தோ்வானது ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. தோ்வை நடத்துவதில் தரத்தை உறுதிப்படுத்தும் விதமாக தோ்வு மையங்களின் எண்ணிக்கையையும், தோ்வறையில் அனுமதிக்கப்படும் மாணவா்களின் எண்ணிக்கையையும் தோ்வை நடத்தும் என்டிஏ அதிகரித்துள்ளது’ என்றாா்.

ADVERTISEMENT

முன்னதாக, இரண்டாம் கட்ட க்யூட் தோ்வு தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக சில மையங்களில் ரத்து செய்யப்பட்டது. அதுபோல, மழை, நிலச்சரிவு பாதிப்புகள் காரணமாக கேரளம், இடாநகா் பகுதிகளில் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட க்யூட் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்தச் சூழலில், நான்காம் கட்ட க்யூட் தோ்வு புதன்கிழமை (ஆகஸ்ட் 17) தொடங்கி ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 3.6 லட்சம் போ் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT