இந்தியா

குஜராத்தில் தரமான, இலவசக் கல்வி: கேஜரிவாலின் தேர்தல் வாக்குறுதி

16th Aug 2022 06:04 PM

ADVERTISEMENT

குஜராத்தில் அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும் என ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் குஜராத்தின் புஜ் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். 

அப்போது அவர், 'குஜராத்தில் கல்வியின் தரத்தை மேம்படுத்த நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். இங்கு அரசுப் பள்ளிகளின் நிலை சரியில்லை.

சிறந்த அரசுப் பள்ளிகளை உருவாக்கி தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக்குவோம். குஜராத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான இலவச கல்வியை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தருவோம். 

ADVERTISEMENT

அனைத்து தனியார் பள்ளிகளும் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். கூடுதல் கட்டணம் செலுத்தியவர்களுக்கு கட்டணம் திருப்பி அளிக்கப்படும். எந்தப் பள்ளியும் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்கமாட்டோம். பள்ளிகள் அனைத்தும் அனுமதி பெற்ற பின்னரே கட்டணத்தை உயர்த்த முடியும். ஆசிரியர் காலிப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். கற்பித்தல் பணியைத் தவிர வேறு பணிகள் ஆசிரியருக்கு வழங்கப்படமாட்டாது' என்று பேசினார். 

தில்லி, பஞ்சாபைத் தொடர்ந்து நடப்பாண்டு இறுதியில் நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் ஆம் ஆத்மி தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழு விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு?

ADVERTISEMENT
ADVERTISEMENT