இந்தியா

நாய்களைத் துன்புறுத்திய காவலாளி: பிரம்பால் அடித்த ஆசிரியை

16th Aug 2022 11:39 AM

ADVERTISEMENT

 

உத்தரப் பிரதேசத்தில் நாய்களிடம் தவறாக நடந்துகொண்டதாக காவலாளி ஒருவரை ஆசிரியை பிரம்பால் அடிக்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில், எல்ஐசி வளாக குடியிருப்புப் பகுதியில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் காவலாளியாகப் பணிபுரிந்து வந்துள்ளார். 

படிக்கரிக்ஷா ஓட்டுநருக்கு 90 விநாடிகளில் 17 அறைகள் கொடுத்தப் பெண்! வலுக்கும் கண்டனங்கள்!

ADVERTISEMENT

அவர் நாய்களிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், நாய்களைத் துன்புறுத்தியதாகவும், கூறப்படுகிறது. இதனைக் கண்ட ஆசிரியை பிரம்பால் காவலாளியை சாலையில் நிற்கவைத்து மிரட்டுகிறார். வாக்குவாதத்தின்போது ஆத்திரமடைந்த ஆசிரியை, காவலாளியை பிரம்பால் தாக்குகிறார். இதனை அங்கிருந்தவர்கள் விடியோ பதிவு செய்துள்ளனர். 

படிக்கபீட்சா மாவு மீது இவையெல்லாமா? முகம் சுளிக்க வைக்கும் டோமினோஸ்

இந்த விடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆக்ரா காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்துள்ளார். 

எனினும், முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை, சாலையில் நிற்கவைத்து பிரம்பால் அடிப்பதா? என பலரும் சமூக வலைதளங்களில் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT