இந்தியா

ஆளுநர் தமிழிசையின் விருந்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் தெலங்கானா முதல்வர்

16th Aug 2022 11:16 AM

ADVERTISEMENT

 

சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற, தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் தேநீர் விருந்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்தார். இந்தத் தொடர் புறக்கணிப்பு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்து 76ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விழாவானது மிக பிரம்மாண்டமாக நேற்று கொண்டாடப்பட்டது.

இதற்கிடையே, ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாள் மாலையில் மாநில ஆளுநர்களால், அந்தந்த மாநிலங்களில் உள்ள முதல்வர், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் உள்பட முக்கியமான பலருக்கு தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.

ADVERTISEMENT

அந்த வகையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தில் பங்கேற்காமல் முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதையும் படிக்க | பி.இ. சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி

முன்னதாக, தெலங்கானாவில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கொடியேற்றிய பின் பேசிய முதல்வர் சந்திரசேகர் ராவ், மத்திய, மாநில அரசுகளுக்கு சமமான அதிகாரம் அளிக்கும் வகையில் கூட்டாட்சி அமைப்பை அரசியலமைப்புச் சட்டத்தில் உருவாக்கினார்கள். ஆனால் தற்போதைய மத்திய அரசு இந்த கூட்டாட்சி உணர்வை பலவீனப்படுத்தி வருகிறது. மேலும், மாநிலங்களின் அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றவும் முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டினார்.

கடந்த குடியரசு நாளன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்திலும் முதல்வர் சந்திரசேகர் கலந்து கொள்ளவில்லை. ஆளுநர் தொடர்பான எந்த நிகழ்விலும் பங்கேற்காமல் புறக்கணித்துவரும் முதல்வர் சந்திரசேகர் ராவ், பிரதமர் நரேந்திர மோடி வந்தபோதுகூட சந்திப்பைத் தவிர்த்துவிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT