இந்தியா

சிவமொக்கா வன்முறை: ஆக.18 வரை 144 தடை அமலில் இருக்கும் 

16th Aug 2022 06:04 PM

ADVERTISEMENT

 

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் பேனர் கிழிப்பினால் ஏற்பட்ட கலவரத்தினால் வரும் வியாக்கிழமை வரைக்கும் 144 தடை உத்தரவு அமலில் இருக்குமென காவல்துறை கூடுதல் தலைவர் கூறியுள்ளார். 

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் சுதந்திர நாள் கொண்டாட்டத்தின் போது இரு பிரிவினருக்கு இடையே பேனர் கிழிப்பினால் கலவரம் நிகழ்ந்தது. இதில் ஒருவருக்கு கத்திக்குத்து. பின்னர் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது இதுக்குறித்து காவல்துறை கூடுதல் தலைவர் அலோக் குமார் கூறியதாவது: 

தற்போது இங்கு அமைதி நிலவி வருகிறது. ஆக்ஸ்ட் 18 (வியாழக்கிழமை) வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். பத்ராவதி, சிவமொக்காவில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 1000க்கும் அதிகமான காவல்துறை அதிகாரிகள் இங்கு குவிக்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT