இந்தியா

ரூ. 1,026 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

16th Aug 2022 04:44 PM

ADVERTISEMENT

குஜராத்தில் ரூ. 1,026 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை மும்பை போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பரூச் மாவட்டம், அங்கலேஷ்வர் பகுதியில் இயங்கி வரும் மருந்து தொழிற்சாலையில் சட்டவிரோதமாக போதைப் பொருள்கள் தயாரிக்கப்படுவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, 513 கிலோ எடையுள்ள சர்வதேச சந்தையில் ரூ. 1,026 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

ADVERTISEMENT

இதில், ஒரு பெண் உள்பட 7 பேரை கைது செய்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT