இந்தியா

பால் விலையை உயர்த்திய அமுல், மதர் டெய்ரி நிறுவனங்கள்!

16th Aug 2022 03:46 PM

ADVERTISEMENT

அமுல், மதர் டெய்ரி நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ. 2  உயர்த்தியுள்ளன.

குஜராத்தின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான அமுல் நிறுவனம் பால் விலையை உயாத்தியுள்ளது. 

டோன்டு பால் ரூ. 51 ஆகவும் டபுள் டோன்டு பால் ரூ. 45 ஆகவும் பசும்பால் ரூ. 53 ஆகவும் அதிகரித்துள்ளது. டோக்கன் பாலின் விலை ரூ. 46 லிருந்து ரூ. 48 ஆக அதிகரித்துள்ளது. 

500 மில்லி அமுல் கோல்ட் பால் இனி ரூ.35-க்கும், அமுல் தாசா ரூ.25-க்கும், அமுல் சக்தி ரூ.28-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. 

ADVERTISEMENT

நாளை(புதன்கிழமை) முதல் பால் விலை உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதர் டெய்ரி ஃபுல் க்ரீம் பால் விலை ரூ.61 ஆகவும் டோன்டு பால் ஒரு லிட்டர் ரூ.51 ஆகவும் டபுள் டோண்ட் பால் ரூ.45 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

மிகவும் பிரபலமான அமுல் நிறுவனம் பால் விலையை உயர்த்தியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT