இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் காஷ்மீரி பண்டிட் சுட்டுக் கொலை: ஒருவர் காயம்

16th Aug 2022 01:38 PM

ADVERTISEMENT


ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். சுட்டுக் கொன்றவரின் சகோதரர் காயமடைந்தார். 

சோபியான் மாவட்டத்தின் சோதிகம் கிராமத்தில் அர்ஜூன் நாத்தின் மகன் சுனில் குமார் மற்றும் சகோதரர் பித்ம்பர் என்ற பிண்டோ மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

படிக்க: அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை: மேலும் 10 கிலோ தங்கம் பறிமுதல்

இந்த துப்பாக்கிச் சூட்டில் சுனில் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சகோதரர் பிதாம்பர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

கொலையாளியைப் பிடிக்க அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT