இந்தியா

நாட்டில் குறைந்த கரோனா பாதிப்பு!

16th Aug 2022 11:25 AM

ADVERTISEMENT

புது தில்லி: நாட்டில் ஒரேநாளில் மேலும் 8,813 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8,813 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,42,77,194 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 1,11,252  ஆக உள்ளது.

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 29 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 5,27,098 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 15,040 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,36,38,844 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

இதையும் படிக்க: செஸ் போட்டி: முதல் சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி

ADVERTISEMENT

நாட்டில் இதுவரை 208.31 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT