இந்தியா

மும்பையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு

16th Aug 2022 12:03 PM

ADVERTISEMENT

 

மும்பையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

கடந்த சில நாள்களுக்குப் பிறகு நகரில் மழையின் தீவிரம் அதிகரித்துள்ளது. ஆனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

ADVERTISEMENT

பிரஹன்மும்பை மின்சார ரயில்கள் மற்றும் பேருந்து சேவைகள் வழக்கம் போல் இயங்கி வருவதாகக் குடிமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

படிக்க: பி.இ. சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி

நகரின் பெரும்பாலான பகுதிகளில் காலை 10 மணியளவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. அடுத்த 24 மணி நேரத்திற்கு, நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் மிதமான மழையுடன் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது பலத்த காற்றுடன் கூடிய ஒருசில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நகரில் 7.91 மி.மீ மழையும், கிழக்கு மற்றும் மேற்கு புறநகர் பகுதிகளில் 12.94 மி.மீ மற்றும் 12.33 மி.மீ மழையும் பதிவாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அரபிக்கடலில் பிற்பகல் 2.57 மணிக்கு 4.39 மீட்டர் உயர அலைகள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

மும்பையில் கடந்த சில நாள்களாக மழையின் தீவிரம் குறைந்து, நகரின் பெரும்பாலான பகுதிகளில் லேசான மழை பெய்துவரும் நிலையில், இன்று காலை மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT