இந்தியா

பிகார் அமைச்சரவை இன்று விரிவாக்கம்; சுமார் 30 அமைச்சர்கள் பதவியேற்பு?

16th Aug 2022 10:17 AM

ADVERTISEMENT

பிகாா் மாநில முதல்வர் நிதீஷ் குமாா், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் அடங்கிய பிகார் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. சுமார் 30 அமைச்சர்கள் இன்று பதவியேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க.. பீட்சா மாவு மீது இவையெல்லாமா? முகம் சுளிக்க வைக்கும் டோமினோஸ்

பிகார் மாநில அமைச்சரவையில் முதல்வர் உட்பட 36 அமைச்சர்கள் வரை இருக்கலாம். இந்த புதிய அமைச்சரவையில் சில புதிய முகங்களும் இடம்பெற வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

பிகாரில் பாஜகவுடனான கூட்டணியை கடந்த வாரம் முறித்த நிதீஷ் குமாா், முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். இதைத் தொடா்ந்து, மாநிலத்தில் மகா கூட்டணி அரசை அமைப்பதற்காக ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் அவா் கைகோத்தாா்.

பின்னா், ஆளுநரைச் சந்தித்து, மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினாா். 164 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகத் தெரிவித்த நிதீஷ் குமாா், அதற்கான கடிதத்தையும் அளித்தாா்.

இதன் தொடா்ச்சியாக, நிதீஷ் குமாரும், தேஜஸ்வி யாதவும் கடந்த வாரம் புதன்கிழமை பதவியேற்றனா். இந்த நிகழ்வில் பாஜக தரப்பிலிருந்து யாரும் பங்கேற்கவில்லை.

அமைச்சா் பதவிகள் ஒதுக்கீடு குறித்து ஆளும் மகா கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளிடையே முடிவு எட்டப்பட்ட பின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று அப்போது கூறப்பட்டது.

30 அல்லது அதற்கு மேற்பட்டோரை உள்ளடக்கிய புதிய அமைச்சரவையை அமைப்பது குறித்து கொள்கை அளவில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை நிதீஷ் வசமே இருக்கும் எனத் தெரிகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT