இந்தியா

பிகார் அமைச்சரவை விரிவாக்கம்: 31 அமைச்சர்கள் பதவியேற்பு

16th Aug 2022 12:10 PM

ADVERTISEMENT


பிகார் அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்ற நிலையில், 31 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

பிகார் மாநிலத்தில் கடந்த வாரம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், முதல்வராக நிதீஷ் குமாரும், துணை முதல்வராக ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், பாட்னாவிலுள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தேஜ் பிரதாப் யாதவ் உள்பட 31 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இவர்களுக்கு ஆளுநர் பகு சௌஹான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ADVERTISEMENT

அமைச்சரவையில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்திலிருந்து 16 பேர், ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து 11 பேர், காங்கிரஸ் கட்சியிலிருந்து 2 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இதில், முதல்வர் நிதீஷ் குமாருக்கு உள்துறையும், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவிற்கு சுகாதாரத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிகாரில் பாஜகவுடனான கூட்டணியை கடந்த வாரம் முறித்த நிதீஷ் குமாா், முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். இதைத் தொடா்ந்து, மாநிலத்தில் மகா கூட்டணி அரசை அமைப்பதற்காக ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் அவா் கைகோத்தாா்.

இதையும் படிக்க | கோவை: ஆற்றின் நடுவே நின்றிருக்கும் யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது?

பின்னா், ஆளுநரைச் சந்தித்து, மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினாா். 164 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகத் தெரிவித்த நிதீஷ் குமாா், அதற்கான கடிதத்தையும் அளித்தாா்.

இதன் தொடா்ச்சியாக, நிதீஷ் குமாரும், தேஜஸ்வி யாதவும் கடந்த வாரம் புதன்கிழமை பதவியேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT