இந்தியா

பிகார் பாஜக எம்எல்ஏ சுபாஷ் சிங் காலமானார்

16th Aug 2022 11:46 AM

ADVERTISEMENT

 

பாட்னா: பாஜக எம்எல்ஏவும், பிகார் முன்னாள் அமைச்சருமான சுபாஷ் சிங் உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சுபாஷ் சிங் (59), உடல்நலக் குறைவால் புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் உயிரிழந்தார். 

படிக்க: பி.இ. சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி

கோபால்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியில் இருந்த சிங்கின் மரணம் குறித்து முதல்வர் நிதிஷ் குமார் வருத்தம் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இறந்த எம்.எல்.ஏ.வின் மகனுடன் தொலைபேசியில் பேசிய நிதிஷ் குமார், முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்று அறிவித்தார்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT