இந்தியா

பீட்சா மாவு மீது இவையெல்லாமா? முகம் சுளிக்க வைக்கும் டோமினோஸ்

16th Aug 2022 11:30 AM

ADVERTISEMENT


பெங்களூரு: மிகப்பிரபலமான பீட்சா உணவகமான டோமினோஸ் உணவகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம், பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

தரையைத் துடைக்க உதவும் மாஃப், ஒட்டடை அடிக்கும் ஒட்டடைக்குச்சி இறுதியாக கழிப்பறையை சுத்தப்படுத்தும் பிரஷ் அனைத்தும் பீட்சா மாவு உருண்டைகள் வைத்திருக்கும் டப்பா மீது அதுவும் மாவு உருண்டைகளைத் தொட்டபடி இருக்கும் விடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி, பீட்சா பிரியர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

ஷாஹில் கர்நானி என்ற டிவிட்டர் பயனாளர் ஒருவர், பெங்களூருவில் உள்ள டோமினோஸ் பீட்சா கடைசில் எடுத்தப் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், இப்படித்தான் டோமினோஸ் பீட்சா புத்தம் புது பீட்சாக்களை விற்பனை செய்கிறது. மிகவும் மோசம் என்றும் அதில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க.. கோவை: ஆற்றின் நடுவே நின்றிருக்கும் யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது?

அது மட்டுமல்லாமல் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மத்திய சுகாதாரத் துறை, கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்டோரையும் இணைத்துள்ளார்.

இது குறித்து புகழ்பெற்ற டோமினோஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து டோமினோஸ் பீட்சாக்கள் தயாரிக்கப்படுவதாகவும், இந்தச் சம்பவம் எங்களது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த உணவகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிப்பதாகவும், தரம் மற்றும் தூய்மை விஷயத்தில் குறைபாடு ஏற்படுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது எனறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT