இந்தியா

பாதுகாப்புப் படையினர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 6 வீரர்கள் பலி

16th Aug 2022 12:51 PM

ADVERTISEMENT

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர், பஹால்கம் அருகே இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையின் 37 வீரர்கள் மற்றும் ஜம்மு - காஷ்மீர் காவலர்கள் இரண்டு பேருடன் சென்ற பேருந்து பிரேக் பிடிக்காமல் ஆற்றில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 6 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு ஹெலிகாப்டர் மூலம் அனந்த்நாக் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | ஆளுநர் தமிழிசையின் விருந்தை தொடர்ந்து புறக்கணிக்கும் தெலங்கானா முதல்வர்

தொடர்ந்து, விபத்து நடந்த பகுதியில் மீட்புக் குழுவினருடன் இணைந்து மக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT