இந்தியா

இறுதிச் சடங்குக்காக ஆற்றில் ரப்பர் டியூப்பில் கட்டி இழுத்து வரப்பட்ட உடல் (விடியோ)

16th Aug 2022 02:03 PM

ADVERTISEMENT

மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதா ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடுவதால், இறுதிச் சடங்குக்காக ஒரு ஆணின் உடலை ரப்பர் டியூப்பில் கட்டி மிதக்கவிட்டு இழுத்து வரப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

இடுகாட்டுக்குச் செல்லும் ஒரே ஒரு சாலையும் மழை வெள்ளத்தால் மூடப்பட்டுவிட்டதால் இந்த நிலை ஏற்பட்டதாக கிராமத்தினர் கூறுகிறார்கள்.

இதையும் படிக்க.. பீட்சா மாவு மீது இவையெல்லாமா? முகம் சுளிக்க வைக்கும் டோமினோஸ்

ஆற்றில் மிதக்கவிட்டபடி ஒருவரது உடலை கிராமத்தினர் கொண்டு வரும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்துவதாக கிராம நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

 

மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த 55 வயதாகும் விஷமத் உடலை ஆற்றில் கட்டி உறவினர்கள் இடுகாட்டுக்குக் கொண்டுச் சென்றுள்ளனர்.  கனமழை காரணமாக, கிராமத்துக்கு இருந்த ஒரே ஒரு சாலையும் வெள்ளத்தில்மூடப்பட்டுவிட்டதாகக் கூறுகிறார்கள் கிராம மக்கள் வேதனையோடு.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT