இந்தியா

26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதிகரிக்கும் டெங்கு: 178ஆன பாதிப்பு!

16th Aug 2022 05:18 PM

ADVERTISEMENT

 

தலைநகர் தில்லியில் இதுவரை கிட்டத்தட்ட 180 பேருக்கு டெங்கு காய்ச்சல் பதிவாகியுள்ளதாக தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தில்லி மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 

ஜனவரியில் 23, பிப்ரவரியில் 16, மார்ச்சில் 22, ஏப்ரலில் 20, மே மாதத்தில் 30 மற்றும் ஜூன் மாதத்தில் 32 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன.

ADVERTISEMENT

ஆகஸ்ட் 13 வரை, தலைநகரில் 178 டெங்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 6 அன்று 174 ஆக இருந்த நிலையில், ஒரே வாரத்தில் நான்கு பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன. 

இந்த நோயால் இந்தாண்டு இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. 

படிக்க: உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க இது உதவும்!

2017ஆம் ஆண்டில், தில்லியில் ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 13 வரையிலான காலகட்டத்தில் 325 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளன. 

கடந்த ஆண்டு, ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 13 வரை தில்லியில் 68 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதே காலகட்டத்தில், 2020 இல் 41 ஆகவும், 2019 இல் 57 ஆகவும், 2018 இல் 69 ஆகவும் இருந்தது.

தில்லியில் இந்தாண்டு இதுவரை 39 மலேரியா மற்றும் 13 சிக்குன்குனியா வழக்குகள் பதிவாகியுள்ளன

இந்த நோய் பாதிப்பு பொதுவாக ஜூலை, நவம்பர் மாதங்களில் பதிவாகும். ஆனால், இந்த பாதிப்பு காலம் டிசம்பர் மத்திவரை நீடிக்கும். 

படிக்க: சரியான சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கதி!

கொசுக்கள் பெருகுவதற்கு ஏற்ற காலநிலை காரணமாக டெங்கு பாதிப்புகள் முன்கூட்டியே பதிவாகும் சூழல் நிலவுகிறது.

கடந்த ஆண்டு, தலைநகரில் 9,613 டெங்கு பாதிப்புகள் பதிவானது. இது 2015ல் 23 இறப்புகளும், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் தலா பத்து பேரும், 2018 இல் நான்கு பேரும், 2019 இல் 2 பேரும் டெங்குவால் உயிரிழந்துள்ளனர்.

தில்லியில் 2016ல் 4,431 பேருக்கும், 2017ல் 4,726 பேருக்கும் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் இந்த எண்ணிக்கை 2018இல் 2,798 ஆகவும், 2019இல் 2,036, 2020இல் 1,072 ஆகவும் குறைந்துள்ளது.

1996-க்குப் பிறகு தில்லியில் ஏற்பட்ட மிக மோசமான டெங்கு பாதிப்பு இதுவாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT