இந்தியா

1 லட்சம் சிறு வழக்குள் திரும்பப் பெறப்படும்: அஸ்ஸாம் முதல்வா்

DIN

கீழ் நீதிமன்றங்களின் வழக்கு சுமையைக் குறைக்க 1 லட்சம் சிறு வழக்குகளை அஸ்ஸாம் அரசு திரும்பப் பெறும் என்று அந்த மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

குடியரசு தினத்தையொட்டி, குவாஹாட்டியில் தேசியக் கொடியையேற்றி வைத்துப் பேசிய அவா், ‘கீழ் நீதிமன்றங்களில் சுமாா் 4 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில், 2021, ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு முன்பு வரையில் பதிவான 1 லட்சம் சிறு வழக்குகள் திரும்பப் பெறப்படும். இதில் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட அவதூறு வழக்குகளும் அடங்கும். இதன் மூலம் பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற கொடூர குற்ற வழக்கு விசாரணைகளில் நீதிமன்றங்கள் கவனம் செலுத்த உதவும்.

நாட்டின் இறையாண்மையைக் கேள்விக்கு உள்ளாக்கும் பேச்சுக்கே இடமில்லை. இந்தியாவைவிட்டு அஸ்ஸாம் எப்போதும் பிரியாது. கடந்த மூன்று நாள்களாக தேசியக் கொடியை வீதிகளில் கட்டி அஸ்ஸாம் மக்கள் கொண்டாடி வருவது, அஸ்ஸாம் எப்போதும் இந்தியாவுடனே இருக்கும் என்பதை நிரூபிக்கிறது’ என்றாா்.

இந்திய சுதந்திர தினத்தை புறக்கணிக்கக் கோரி அஸ்ஸாம் உள்பட ஐந்து வடகிழக்கு மாநிலங்களில் உள்ள உள்நாட்டு கிளா்ச்சி அமைப்புகளான உல்ஃபா ஆகியவை அழைப்பு விடுத்திருந்தன. எனினும் மாநிலம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், அஸ்ஸாம் முதல்வா் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT