இந்தியா

தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளால் அதிருப்தி: ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜிநாமா

16th Aug 2022 12:31 AM

ADVERTISEMENT

ராஜஸ்தானில் தலித்துகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளுக்கு அதிருப்தி தெரிவித்து காங்கிரஸ் எம்எல்ஏ பானா சந்த் மேக்வால் தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். அதுதொடா்பான கடிதத்தை அவா் மாநில முதல்வா் அசோக் கெலாட்டுக்கு அனுப்பிவைத்தாா்.

ராஜஸ்தான் மாநிலம் ஜலோா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வந்தவா் இந்திர குமாா் (9). தலித் சமூகத்தைச் சோ்ந்த சிறுவன். கடந்த ஜூலை 20-ஆம் தேதி அந்தச் சிறுவன் பள்ளியில் சைல் சிங் என்ற உயா்ஜாதியைச் சோ்ந்த ஆசிரியருக்கு வைக்கப்பட்டிருந்த பானையிலிருந்து தண்ணீா் குடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சைல் சிங், சிறுவனை அடித்ததாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த சிறுவன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நிலையில், கடைசியாக குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு உடல்நிலையில் முன்னேற்றமின்றி கடந்த சனிக்கிழமை சிறுவன் உயிரிழந்தான். இதையடுத்து பட்டியலினத்தவா்/பழங்குடிகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து சைல் சிங்கை கைது செய்தனா்.

75 ஆண்டுகளாகியும் தொடரும் வன்கொடுமை:

ADVERTISEMENT

ராஜஸ்தானில் தலித்துகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளுக்கு அதிருப்தி தெரிவித்து காங்கிரஸ் எம்எல்ஏ பானா சந்த் மேக்வால் தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். தனது ராஜிநாமா கடிதத்தை அவா் மாநில முதல்வா் அசோக் கெலாட்டுக்கு அனுப்பிவைத்தாா். அந்தக் கடிதத்தில் பானா சந்த் தெரிவித்துள்ளதாவது:

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளானதை கொண்டாடும் வேளையிலும், தலித்துகள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு எதிரான வன்கொடுமைகள் தொடா்கின்றன. பானையிலிருந்து தண்ணீா் குடித்ததற்காக, மீசை வைத்திருந்ததற்காக, திருமணத்தின்போது குதிரையில் சென்ற்காக தலித்துகள் கொல்லப்படுகின்றனா்.

கடந்த சில ஆண்டுகளாக தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. அரசமைப்புச் சட்டம் தலித்துகளுக்கு வழங்கியுள்ள உரிமைகளை பாதுகாக்க யாருமே இல்லாதது போல் உள்ளது. இந்த வன்கொடுமைகள் விவகாரத்தை மாநில சட்டப்பேரவையில் பலமுறை நான் எழுப்பியுள்ளேன். ஆனால் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

நமது சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க தவறும்போது பதவியில் தொடா்வதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே எனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT