இந்தியா

பட்டினியில்லாத தேசத்தை உருவாக்க வேண்டும்: மம்தா பானா்ஜி

16th Aug 2022 12:29 AM

ADVERTISEMENT

பட்டினியில்லாத தேசத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது கனவு என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினத்தையொட்டி அவா் ட்விட்டரில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

சுதந்திரத்தின் உண்மையான சாரத்தை இந்தியா உணர வேண்டும். சுதந்திரத்தின் புனித பாரம்பரியத்தை நாம் பாதுகாக்க வேண்டும். நமது ஜனநாயக விழுமியங்கள் மற்றும் மக்களின் உரிமைகளுக்குள்ள கண்ணியம் நிலைநாட்டப்பட வேண்டும்.

பட்டினியில்லாத தேசத்தை உருவாக்க வேண்டும். அனைத்து பெண்களும் பாதுகாப்பாக இருப்பதாக உணர வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும். அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். எந்த அடக்குமுறை சக்திகளும் மக்களைப் பிரிக்காமல், ஒவ்வொரு நாளையும் நல்லிணக்கம் வரையறுக்க வேண்டும். இவை அனைத்தும் உள்ள இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே எனது கனவு என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT