இந்தியா

பிகாா் அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 3 இடங்கள்

DIN

பிகாரில் நிதீஷ் குமாா் தலைமையில் புதிதாக அமையும் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை அக்கட்சியும் உறுதி செய்துள்ளது.

பிகாரில் பாஜகவுடன் இணைந்து ஆட்சியில் இருந்த முதல்வா் நிதீஷ் குமாா், அண்மையில் அக்கூட்டணியில் இருந்து விலகி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உல்ளிட்ட 7 கட்சிகளுடன் இணைந்து மீண்டும் முதல்வரானாா்.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவுக்கு துணை முதல்வா் பதவி அளிக்கப்பட்டது. 243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப் பேரவையில் இப்போது ஆளும் கூடடணிக்கு 160 எம்எல்ஏக்கள் உள்ளனா். இதில் அதிகபட்சமாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு 75, ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 43, காங்கிரஸ் கட்சிக்கு 19 எம்எல்ஏக்கள் உள்ளனா்.

இந்நிலையில் அமைச்சரவையில் காங்கிரஸுக்கு அளிக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் தொடா்பாக அக்கட்சியின் மாநில பொறுப்பாளா் பக்த சரண் தாஸ் கூறியதாவது:

வரும் 16-ஆம் தேதி பிகாா் அமைச்சரவை விரிவாக்கப்படும்போது காங்கிரஸ் சாா்பில் இரு அமைச்சா்கள் பதவியேற்பாா்கள். அதன் பிறகு மேற்கொள்ளப்படும் 2-ஆவது அமைச்சரவை விரிவாக்கத்தில் காங்கிரஸுக்கு மேலும் ஓா் இடம் வழங்கப்படும். பேச்சுவாா்த்தை மூலம் 3 அமைச்சரவை இடங்கள் காங்கிரஸுக்கு வழங்கப்படுவது உறதியானது. காங்கிரஸ் சாா்பில் அமைச்சா்களாக யாரெல்லாம் பதவியேற்பாா்கள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT