இந்தியா

நாட்டுப்புறக் கலைஞர்களுடன் நடனமாடிய மம்தா பானர்ஜி! (விடியோ)

15th Aug 2022 11:43 AM

ADVERTISEMENT

கொல்கத்தாவில் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நாட்டுப்புறக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடினார். 

நாட்டின் சுதந்திர நாள் இன்று அனைத்து மாநிலங்களிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

மேற்கு வங்கத்திலும் தலைமைச் செயலக வளாகத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கொடியேற்றி உரையாற்றினார். 

ADVERTISEMENT

இதன்பின்னர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது, நாட்டுப்புறக் கலைஞர்களுடன் மம்தா பானர்ஜி நடனமாடினார். 

இதையும் படிக்க | சுதந்திர நாள்: சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டது கூகுள்!

இந்த விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT