இந்தியா

தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

15th Aug 2022 07:46 AM

ADVERTISEMENT

நாட்டின் சுதந்திர நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார். 

செங்கோட்டையில் தொடர்ந்து 9ஆவது முறையாக தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி. அப்போது 4 ஹெலிகாப்டர்களில் இருந்து தேசியக் கொடிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சுதந்திர நாள் விழாவையொட்டி செங்கோட்டையில் 10,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

விழாவில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், முப்படைத் தளபதிகள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். செங்கோட்டையை சுற்றி 5 கி.மீ. சுற்றளவுக்கு வான் பகுதியில் பட்டம், ட்ரோன் போன்றவை பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

முன்னதாக சுதந்திர நாளையொட்டி தில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். சுதந்திர தினத்தையொட்டி 3 நாள்களுக்கு ‘வீடுதோறும் தேசியக் கொடி’ ஏற்றுவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

அதன்படி, நாடு முழுவதும் பலா் தங்கள் வீட்டிலும், பொது இடங்களிலும் தேசியக் கொடியைப் பறக்கவிட்டுள்ளனா். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT