இந்தியா

எல்லையில் இனிப்புப் பரிமாறிக் கொண்ட இந்தியா - பாக். வீரர்கள்

15th Aug 2022 11:23 AM

ADVERTISEMENT

சுதந்திர நாளையொட்டி சர்வதேச எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

நாடு முழுவதும் சுதந்திர நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தில்லி செங்கோட்டையில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.

இதையும் படிக்க | நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஆர்.எஸ். புரா சர்வதேச எல்லையில் இன்று காலை எல்லைப் பாதுகாப்புப் படையினரும், பாகிஸ்தான் ரேஞ்சர்ஸும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

அதேபோல், அட்டாரி - வாகா எல்லை உள்பட பிற சர்வதேச எல்லைகளிலும் இருநாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT